வஞ்சிரம் அல்லது மெளலாசி அல்லது நெய்மீனின் தலை. [SEER HEAD]

பொதுவாக வஞ்சிரம் தலையை பெருமளவு மக்கள் சமைத்து உண்டிருக்க மாட்டார்கள். பெரும்பாலான ஓட்டல்களிலும் இதே நிலைமைதான். ஆனால் சென்னையில் தி.நகர் ஓட்டலில் இதை முழுவதுமாக விற்பதைக் கண்டிருக்கின்றேன். பொதுவாக இதன் தலைப்பகுதியை முள்ளோடு குழம்பு வைப்பார்கள். அல்லது மஞ்சள் தூள் நிறைய இட்டு தேங்காயும் கலந்து தித்திப்பு வைப்பார்கள். இதனால் வாடை அடிக்காது, ஆனால் தித்திப்பு குழம்பு அன்றிரவிற்குள் உண்டுவிட வேண்டும். இல்லையெனில் மறுநாள் தேங்காய் அதிக அளவில் சேர்ப்பதால் அது கெட்டு போய் விடும். குழம்பு வைத்தால் இரண்டு நாட்டுகளுக்கு தாங்கும். அதை சூடுசெய்து இட்லிக்கோ அல்லது தோசைக்கோ தொட்டுக்கொண்டால் அமுதமாக தெரியும். அதன் முள்ளெல்லாம் குழம்பின் சாறு இறங்கி கடிக்கும்போது அதன் சாறானது தொண்டையில் இறங்கும்போது மோட்சம் கிட்டும். ஆனால் அதனுடைய பற்களில் கவனம். விஷத்தன்மை வாய்ந்தது. அது உடலில் பட்டால் இரத்தம் உறையாமல் வந்து கொண்டே இருக்கும். ஜாக்கிரதை!!!

Comments

Popular posts from this blog

முயல் பாறை அல்லது மொசப்பாறை.

கண்ணாடி சுதும்பு.

காலா மீன் [SALMON FISH]