சைமன் என்கின்ற சீலா அல்லது ஊளி [BARRACUDA]
சைமன் என்கின்ற சீலா மீன். இது தென்மாவட்டங்களில் ஊளிமீன் என்று அழைக்கப்படுகின்றது. படத்தில் காட்டப்பட்டிருப்பது வெண்ணிற சதை கொண்ட மீனாகும். இதுவே சுவையாக இருக்கும். சில மீன்கள் அரிந்தால் அதன் சதை கறுப்பாக இருக்கும். இது அவ்வளவு சுவையாக இருக்காது என்றாலும் அனைவராலும் விரும்பப்படுவதாகும்.
அயல்நாடுகளில் புகழ்பெற்ற இம்மீன் தமிழகத்தில் ஏனோ பரவலாக அறியப்படவில்லை. இந்த மீனின் சிறப்பு அம்சம் என்னவென்றால், சதை சற்று விரைப்பாக இல்லாவிடினும், குழம்பில் போட்டு வேகவைத்தால், சதைப்பகுதி இறுகிவிடும். முள் பயமே இன்றி சாப்பிடலாம். ஆனால் இதன் நடுப்பகுதி முதுகுத்தண்டு முள்ளானது மிகவும் அழுத்தம் உடையது. சற்றும்கூட கடிக்கவே முடியாது.
விலைகுறைந்த இம்மீன் வறுக்கவும் குழம்பு வைக்கவும் ஏற்றதாகும். சுவையும் வழக்கமான மீன்சுவை போலன்றி மாறுபாடாக இருக்கும்.
Comments
Post a Comment