கண்ணாடி சுதும்பு.
கண்ணாடி சுதும்பு. இந்த மீன் அதிகபட்சமாக உள்ளங்கை அளவுக்கு வளரும். அதற்கும்மேல் வளராது.
பொதுவாக அங்காடிகளில் அவ்வளவாக வருவதில்லை. சுத்தப்படுத்துவதற்கு எளிதான இம்மீன், பார்ப்பதற்கு வெளேரென்று ஒளி ஊடுருவக் கூடியதாக இருக்கும். அதாவது உற்றுநோக்கினால் அதன் உடலுக்கு உள்ளே இருப்பதுவும் தெரியவரும்.
வறுத்தால் நன்றாக இருக்கக்கூடும், ஆனால் குழம்பு வைத்தால்தான் இதன் மருத்துவக்குணங்கள் வெளிப்படும். புளி அதிகம் சேர்க்காது மிளகு நிறைய சேர்த்து, நீராக குழம்பு வைத்து, கண்களில் நீர்வர, சோற்றில் பிசைந்துகொண்டு உண்டால், ஜலதோஷம் எல்லாம் காணாமல் போய்விடும்!
Informative
ReplyDelete