காலா மீன் [SALMON FISH]
காலா மீன் என்கிற இந்த சாலமன் மீன் வகையானது இரண்டு வகையாக வருகின்றது. ஒன்று மஞ்சள் நிறத்திலும் மற்றொன்று வெண்ணிற நிறத்தில் சற்று உருட்டையாகவும் வளர்கிறது.-----------------------நிரம்ப மருத்துவக்குணங்கள் [ஒமேகா 3] இந்த மீன் நம்முடைய இந்திய நாட்டில் கிடைக்கின்றது. வறுக்கவும் குழம்பு வைக்கவும் ஏற்றது. இரண்டு வகையான சமையலிலும் மணம் கமகமக்கும்.----------------------மீனின் செதில்கள் சிவந்தும், மற்றும் மீனின் உடல் விரைப்பாகவும் இருந்தால் மட்டுமே வாங்கவும்.------------அயல்நாட்டில் வாழ்கின்ற காலா மீன்களின் வாழ்வியல் முறை சுவையானது. அது முட்டை ஈனும் பருவம் வந்ததும், கடலில் இருந்து ஆற்றுப்படுகைக்கு வந்து, ஆங்கிருந்து உள்முகமாக நீந்தி, எதிர்ப்படும், அருவி முதலான பாறைகளில் ஏறி, [நிஜமாகவே ஏறும், நம்மூர் பனங்கொட்டை மீன் என்று உள்ளது. அது பனைமரத்தின் மீது எல்லாம் ஏறும்] தான் முன்பு வாழ்ந்திருந்த இடத்தை அடைந்து, அங்கே முட்டைகளை கொத்து கொத்தாக ஈனும்.--------------------------------------------இப்படியாக முட்டைகளில் இருந்து பிறக்கும் மீன்குட்டிகள் ஆற்றினில் நீந்தி கடலை அடையும். பிற்பாடு அவற்றுக்கும் முட்டை ஈனும் பருவம் வந்ததும் பழையபடி பயணம் மேற்கொள்ளும்.
Comments
Post a Comment