நெத்திலி [ANCHOVY]
நெத்திலி மீன். ஆங்கிலத்தில் இது ANCHOVY அழைக்கப்படுகிறது. உடல் முழுவதும் சுண்ணாம்பு சத்து காணப்படும், சுத்தப்படுத்துவதற்கு எளிதான இம்மீன் மாங்காய் போட்ட குழம்புக்கும், வறுவலுக்கும் அல்லது தித்திப்புக்கிற்கும் ஏற்றது. விலை குறைவான இம்மீன் அதிகம் உண்டால் உடல் உஷ்ணப்படும் என்று அறிக-------------------------------------------நெய்+தோலி= நெத்திலியாக மறுவிற்று என மீன்விரும்பியான எழுத்தாளர் நாஞ்சில்நாடன் கூறுவார்.-------------------------------அதேசமயம் குழந்தை பெற்று பால்தருகின்ற நிலையிலுள்ள தாய்மார்கள் இதை உண்ணக்கூடாது. காரணம், நெத்திலி மீனிலுள்ள மெல்லிய முட்கள் ஜீரணமாகமலே, அப்படியே பாலுடன் கலந்து, குழந்தையின் வயிற்றுக்கு உபாதைகள் தரும்-----------------------------------------------இதை நானே மீனவர் வீடுகளில் கண்டு உள்ளேன். சட்டி நிறைய நெத்திலி தித்திப்பு ஆக்கிவிட்டு, உண்டதும் மீதி இருந்த குழம்பை எடுத்து குப்பை தொட்டியில் ஊற்றி விட்டனர் காரணம் அவர்கள் வீட்டில் ஒரு தாய்மார் உண்டு-----------------------------காரணம் கேட்டதற்கு, நெடுநாட்களாக நெத்திலிமீனை உண்ணாதிருக்கும் அந்த தாயானவள், ஆவல் காரணமாக உண்டுவிடுவார் என்று கூறினர்.
Comments
Post a Comment