அரைக்கோலாவும் வஞ்சிரமும்.

படத்தில் காணப்படுவது இரண்டு மீன் துண்டங்கள். அவற்றை வஞ்சிரம் மீன் என்று நினைத்துக்கொண்டால் நான் பொறுப்பல்ல. முதலில் காணப்படுவது வஞ்சிரத்தைபோலவே இருக்கும், “அரைக்கோலா”, மீனாகும். இரண்டாவதாக காணப்படுவதே வஞ்சிரம் துண்டமாகும். 



 ஆக இந்த அரைக்கோலா மீன் பார்ப்பதற்கு 90 சதவிகிதம் வஞ்சிரம் போலவே இருக்கும். ஆனால் சுவையிலோ வஞ்சிரத்தை கிட்டகூட நெருங்காது. இதை வறுத்து உண்டால் வாயெல்லாம் நமநமவென்று இருக்கும். தொண்டையில் சங்கடம்கூட விளையலாம். எனவே அரைக்கோலாவிற்கும் வஞ்சிரத்திற்கும் வேறுபாடு காண்பது எப்படி? அரைக்கோலா மீன் உருட்டை வடிவமாக இருக்கும். உட்புற சதையானது சுத்தமாக வட்டவடிவத்தில் சுருள்சுருளாக அமைந்திருக்கும். வாய்ப்பகுதியானது வஞ்சிரத்தைவிட சற்று நீண்டு கொண்டிருக்கும். இருப்பினும் ஓரிரண்டு முறைக்கு நன்கு உற்றுப்பார்த்தாலே வித்தியாசம் கண்டு பிடிக்க முடியும். 



ஆனால் இதன் விலை படுமட்டம், ஆனால் வியாபாரிகள் வஞ்சிரத்தின் விலை சொல்லியே விற்பார்கள். எனவே அடுத்தமுறை வாங்கும்போது பார்த்து வாங்கவும். ஓட்டல்களில் விற்கப்படும்போது, இந்த மீனை அடையாளம் காண்பது படுகடினம். காரணம் மசாலா தடவி, தக்காளி வெங்காயம் எலுமிச்சை பழமெல்லாம் அரிந்து வைத்து இதை உங்கள்முன் வைக்கும்போது சகலமும் மறந்து போகும்!!!

Comments

Popular posts from this blog

முயல் பாறை அல்லது மொசப்பாறை.

கண்ணாடி சுதும்பு.

காலா மீன் [SALMON FISH]