வெள்ளை வெளவால்
கறுப்பு வெளவாலுக்கு இணையாக இந்த வெள்ளை வெளவால் மீன் இருப்பதில்லை. காரணம் விலை குறைவாக இருந்தாலும் கறுப்பு வெளவால் மீன் சுவையானது, முட்கள் எளிதில் கடிக்கும் தன்மை வாய்ந்தது. தவிர மென்மையானது.
ஆனால் வெள்ளை வெளவாலோ சுவையற்றது, குறிப்பாக தமிழ்நாட்டு மக்களுக்கு அவ்வளவாக பிடிப்பதில்லை. ஆனாலும் இதன் விலையானது கறுப்பு வெளவால் மீனைவிட பன்மடங்கு அதிகம். காரணம் அதன் வெள்ளைநிற உருவம். பார்ப்பதற்கு பளப்பளப்பாக வெகு அழகாக இருக்கும்.
இதன் செவுளை அழுத்தினால் பிசுபிசுப்பாக வெள்ளை திரவம் வடியும், அதுவே நல்லதொரு மீனாகும், ஆனால் இரத்தம் வடிந்தாலோ அது சற்று மட்டுப்பட்ட மீனாகும்.
நானும் இதை பன்முறை சுவைத்துப் பார்த்தேன், ஆனால் சுவைக்கவில்லை. ஓட்டல்களுக்கு, பார்ட்டிகளுக்கு, ஏற்றுமதி செய்வதற்கு உகந்த மீனாகும். மற்றபடி உள்ளூர் மக்களுக்கு விருப்பமான சுவையான மீன் அல்ல.
Comments
Post a Comment