Posts

அரைக்கோலாவும் வஞ்சிரமும்.

Image
அரைக்கோலா&வஞ்சிரம் என்கின்ற மெளலாசி படத்தில் காணப்படுவது இரண்டு மீன் துண்டங்கள். அவற்றை வஞ்சிரம் மீன் என்று நினைத்துக்கொண்டால் நான் பொறுப்பல்ல. முதலில் காணப்படுவது வஞ்சிரத்தைபோலவே இருக்கும், “அரைக்கோலா”, மீனாகும். இரண்டாவதாக காணப்படுவதே வஞ்சிரம் துண்டமாகும்.   ஆக இந்த அரைக்கோலா மீன் பார்ப்பதற்கு 90 சதவிகிதம் வஞ்சிரம் போலவே இருக்கும். ஆனால் சுவையிலோ வஞ்சிரத்தை கிட்டகூட நெருங்காது. இதை வறுத்து உண்டால் வாயெல்லாம் நமநமவென்று இருக்கும். தொண்டையில் சங்கடம்கூட விளையலாம். எனவே அரைக்கோலாவிற்கும் வஞ்சிரத்திற்கும் வேறுபாடு காண்பது எப்படி? அரைக்கோலா மீன் உருட்டை வடிவமாக இருக்கும். உட்புற சதையானது சுத்தமாக வட்டவடிவத்தில் சுருள்சுருளாக அமைந்திருக்கும். வாய்ப்பகுதியானது வஞ்சிரத்தைவிட சற்று நீண்டு கொண்டிருக்கும். இருப்பினும் ஓரிரண்டு முறைக்கு நன்கு உற்றுப்பார்த்தாலே வித்தியாசம் கண்டு பிடிக்க முடியும்.  ஆனால் இதன் விலை படுமட்டம், ஆனால் வியாபாரிகள் வஞ்சிரத்தின் விலை சொல்லியே விற்பார்கள். எனவே அடுத்தமுறை வாங்கும்போது பார்த்து வாங்கவும். ஓட்டல்களில் விற்கப்படும்போது, இந்த மீனை அ...

வெள்ளை வெளவால்

Image
கறுப்பு வெளவாலுக்கு இணையாக இந்த வெள்ளை வெளவால் மீன் இருப்பதில்லை. காரணம் விலை குறைவாக இருந்தாலும் கறுப்பு வெளவால் மீன் சுவையானது, முட்கள் எளிதில் கடிக்கும் தன்மை வாய்ந்தது. தவிர மென்மையானது. ஆனால் வெள்ளை வெளவாலோ சுவையற்றது, குறிப்பாக தமிழ்நாட்டு மக்களுக்கு அவ்வளவாக பிடிப்பதில்லை. ஆனாலும் இதன் விலையானது கறுப்பு வெளவால் மீனைவிட பன்மடங்கு அதிகம். காரணம் அதன் வெள்ளைநிற உருவம். பார்ப்பதற்கு பளப்பளப்பாக வெகு அழகாக இருக்கும். இதன் செவுளை அழுத்தினால் பிசுபிசுப்பாக வெள்ளை திரவம் வடியும், அதுவே நல்லதொரு மீனாகும், ஆனால் இரத்தம் வடிந்தாலோ அது சற்று மட்டுப்பட்ட மீனாகும். நானும் இதை பன்முறை சுவைத்துப் பார்த்தேன், ஆனால் சுவைக்கவில்லை. ஓட்டல்களுக்கு, பார்ட்டிகளுக்கு, ஏற்றுமதி செய்வதற்கு உகந்த மீனாகும். மற்றபடி உள்ளூர் மக்களுக்கு விருப்பமான சுவையான மீன் அல்ல.

புதிதான மீன்களை வாங்க வேண்டாம்.

Image
புதிதான ஃபிரஷ் என்று கேட்பார்களே அந்த மீன்களை வாங்கவே வேண்டாம். குறைந்தபட்சம் அரைநாளாவது அந்த மீன்கள் ஐஸில் வைத்திருக்க வேண்டும். அதையே வாங்கி சமைத்து உண்பது சாலச்சிறந்தது./ நூறு வருடங்களுக்கு முன்பு சென்னை மாநகரில் ஐஸ் வைத்த மீன்கள் கிடைப்பது அரிது.காரணம் அப்போதெல்லாம் ஐஸ் என்ற பொருளே கிடையாது. ஒன்று மீன்களை புதிதாக உண்ண வேண்டும், அல்லது மீன் சுவையே என்னவென்று அறியாமல் இருக்க வேண்டும். நான் சொல்வது கடல் மீன்களை மட்டுமே, மற்றபடி ஆறு குளங்களில் பிடிக்கப்படும் மீன்களை அல்ல./ பிற்பாடு சென்னை நகரத்திற்கு ஐஸ் அறிமுகமாகி குளிர்பதன வசதிகள் எல்லாம் வந்துவிட்ட நிலையில், ஸ்டார் ஓட்டல்களில் மூன்று மாதத்திற்கு மேலாக குளிர்சாதனத்தில் வைத்த மீன்களை உங்களுக்கு சமையல் செய்து பரிமாறும் வழக்கம் வந்து விட்டது. ஐய்யோ! மூன்று மாதத்திற்கு மேலாகவா! என்று நீங்கள் மூச்சை இறுகப்பிடிப்பதை உணர்கின்றேன்! அது ஸ்டார் ஓட்டல்களில் மட்டுந்தான்!/ சுமார் முப்பதைந்து வருடங்களுக்கு முன் திருவல்லிக்கேணியில் இருக்கும் என் வீட்டில் தினந்தோறும் மீன் சமைப்பார்கள். அப்போதெல்லாம் வீடே மீன் மணத்தில் நாறும். சமைப்பதற்கு முன்...

புள்ளிப்பாறை

Image
புள்ளிப்பாறை என்ற இந்தமீன் நடுக்கடலில் பாறைகளின் நடுவில் கிடைப்பது.############################# ஆனால் அவ்வளவாக கிடைப்பதில்லை. இதுவும் குழம்ப வைக்க அல்லது வறுக்க சுவையே!!!######################. மற்றும் சுவையில் இதற்கு நிகராக தேங்காய்ப்பாறையை சொல்லலாம் என்றாலும், தேங்காய்ப்பாறையின் சுவையே அலாதிதான்!!! எனினும் மீன்விரும்பிகளின் அட்டவணையில் இந்தமீனுக்கும் இடமுண்டு!!!!

கதம்ப இறால் [KADAMBA PRAWNS]

Image
கதம்ப இறால் எனும் கடலிறால். இது அடிக்கடி கிடைப்பதில்லை. பார்ப்பதற்கு சமக்க இறால் போலவே இருந்தாலும், இதன் நிறத்தில் அடர்த்தி அதாவது டார்க்னஸ் அதிகம். ஆனால் சமக்க இறால் போலவே இதனுள் மண் முதலான மாசுகள் தங்குவதில்லை. இதை குழம்ப வைக்க, தொக்கு வைக்க, அல்லது வறுக்கவும் செய்யலாம். எப்படி செய்தாலும் உண்ணும்போது நடுக்கடலின் வாசம் அடிக்கும். இதைவிட பிரியாணிக்கு ஏற்றது. ஆம் மற்றெந்த இறால்களைவிடவும் இதன் பிரியாணி கூடுதலான மணமும் சுவையும் தரும். ஒருமுறை இதை பிரியாணி செய்து உண்டுவிட்டால், பின் வாழ்நாளில் இதை மறக்கமாட்டீர்கள். அத்தளவு சுவை கூட்டும். வேண்டுமானால் முயற்சித்துப் பாருங்களேன்!!!

முயல் பாறை அல்லது மொசப்பாறை.

Image
முயல் பாறை அல்லது மொசப்பாறை அல்லது முசுங்கு பாறை என்று பலபேர்களில் அழைக்கப்படும் இந்த வகை அரிய மீன் பொதுவாக அங்காடிகளில் விற்கப்படுவதில்லை.----------------------------------காரணம் இது மிக அரிதாகவே கிடைக்கின்றது-------------------------------தவிர இதன் சுவை மிகவும் அற்புதமாக, வான்மேகங்களை உண்பதுபோலவே, சரசரவென தொண்டைக்குள் இறங்கும்.----------------------------------அதனாலேயே மீனவர்கள் தமக்குத்தாமே இதை பங்கிட்டுக் கொள்வார்கள், மீறி அங்காடிக்கு வந்தால், வியாபாரிகளே தத்தம் வீடுகளுக்கு கொண்டு சென்று விடுவார்கள்.

டைகர் இறால் [TIGER PRAWNS 35 COUNTS]

Image
டைகர் இறால் என்பது பச்சைவரி இறால் அல்லது பழுப்புவரி இறாலோ ஆகும். படத்தில் காணப்படுவது கிலோவுக்கு 35 இறால்கள் எடை நிற்கும்.----------------------------------------------------------இவை பழவேற்காட்டில் பிடிக்கப்பட்டவை ஆகும். வறுத்தால் மிக நன்றாக இருக்கும். ஆனால் மிக அதிகமாக உண்டால் வாயுத்தொல்லையில் கொண்டு போய் நிறுத்திவிடும்.