கதம்ப இறால் [KADAMBA PRAWNS]
கதம்ப இறால் எனும் கடலிறால்.
இது அடிக்கடி கிடைப்பதில்லை. பார்ப்பதற்கு சமக்க இறால் போலவே இருந்தாலும், இதன் நிறத்தில் அடர்த்தி அதாவது டார்க்னஸ் அதிகம். ஆனால் சமக்க இறால் போலவே இதனுள் மண் முதலான மாசுகள் தங்குவதில்லை.
இதை குழம்ப வைக்க, தொக்கு வைக்க, அல்லது வறுக்கவும் செய்யலாம். எப்படி செய்தாலும் உண்ணும்போது நடுக்கடலின் வாசம் அடிக்கும்.
இதைவிட பிரியாணிக்கு ஏற்றது. ஆம் மற்றெந்த இறால்களைவிடவும் இதன் பிரியாணி கூடுதலான மணமும் சுவையும் தரும். ஒருமுறை இதை பிரியாணி செய்து உண்டுவிட்டால், பின் வாழ்நாளில் இதை மறக்கமாட்டீர்கள். அத்தளவு சுவை கூட்டும். வேண்டுமானால் முயற்சித்துப் பாருங்களேன்!!!
Comments
Post a Comment