புதிதான மீன்களை வாங்க வேண்டாம்.

புதிதான ஃபிரஷ் என்று கேட்பார்களே அந்த மீன்களை வாங்கவே வேண்டாம். குறைந்தபட்சம் அரைநாளாவது அந்த மீன்கள் ஐஸில் வைத்திருக்க வேண்டும். அதையே வாங்கி சமைத்து உண்பது சாலச்சிறந்தது./ நூறு வருடங்களுக்கு முன்பு சென்னை மாநகரில் ஐஸ் வைத்த மீன்கள் கிடைப்பது அரிது.காரணம் அப்போதெல்லாம் ஐஸ் என்ற பொருளே கிடையாது. ஒன்று மீன்களை புதிதாக உண்ண வேண்டும், அல்லது மீன் சுவையே என்னவென்று அறியாமல் இருக்க வேண்டும். நான் சொல்வது கடல் மீன்களை மட்டுமே, மற்றபடி ஆறு குளங்களில் பிடிக்கப்படும் மீன்களை அல்ல./ பிற்பாடு சென்னை நகரத்திற்கு ஐஸ் அறிமுகமாகி குளிர்பதன வசதிகள் எல்லாம் வந்துவிட்ட நிலையில், ஸ்டார் ஓட்டல்களில் மூன்று மாதத்திற்கு மேலாக குளிர்சாதனத்தில் வைத்த மீன்களை உங்களுக்கு சமையல் செய்து பரிமாறும் வழக்கம் வந்து விட்டது. ஐய்யோ! மூன்று மாதத்திற்கு மேலாகவா! என்று நீங்கள் மூச்சை இறுகப்பிடிப்பதை உணர்கின்றேன்! அது ஸ்டார் ஓட்டல்களில் மட்டுந்தான்!/ சுமார் முப்பதைந்து வருடங்களுக்கு முன் திருவல்லிக்கேணியில் இருக்கும் என் வீட்டில் தினந்தோறும் மீன் சமைப்பார்கள். அப்போதெல்லாம் வீடே மீன் மணத்தில் நாறும். சமைப்பதற்கு முன்...